பல கனவுகளுடன் திருமணம் செய்த இளைஞர்… திருமணமான மறுநாளே கிடைத்த பாரிய ஏமாற்றம்

திருமணமான அடுத்த நாளே புது மணப்பெண் ஒருவர் காதலனை திருமணம் செய்து எஸ்கேப் ஆகியதோடு, பொலிசில் தஞ்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி, நடுவலூரைச் சேர்ந்த, பெரியசாமி. இவரது மகன் ரவிக்குமார்(28). இவருக்கும் சந்தியா(20) என்ற பெண்ணிற்கும் கடந்த 3ம் திகதி திருமணமாகியுள்ளது.

அதன் பின்பு மறுநாள் மாலை, 6 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற சந்தியா வீடு திரும்பாததால், அவரது கணவர் ரவிக்குமார், பொலிசில் புகாரளித்தார். இதனையடுத்து, சின்னமசமுத்திரத்தை சேர்ந்த வல்லரசு(23) திருமணம் செய்து கொண்ட சந்தியா மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

சந்தியா தனது உறவினர்களுக்கு முன்னிலையில், தானும், வல்லரசும் காதலித்து வந்ததாகவும், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ரவிக்குமாரைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் காதலனை ஏமாற்ற தனக்கு மனம் வராததால், மதுரை கோவிலுக்கு அவருடன் சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், மேற்கொண்டு காதலனுடனேயே தான் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, ரவிகுமார் கட்டிய தாலி மற்றும் நகைகளை சந்தியா பொலிஸாரிடம் ஒப்படைக்க, பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்கப் போவதில்லை என்றும் மகள் என்கிற உறவே இனி தங்களுக்கு இல்லை’ என்றும் கூறி கதறினர். ரவிக்குமாரோ, தான் சந்தியாவை திருமணம் செய்ததற்கு ஆன 2 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனால் ரவிகுமாருக்கு வல்லரசு, 1.25 லட்சம் ரூபாயையும், சந்தியாவின் பெற்றோர், 75 ஆயிரம் ரூபாயையும், 10 நாளில் கொடுப்பதாக கூறி எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap