
நடிகர் சிம்புக்கு கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் லண்டன் பெண்ணை மணக்க இருப்பதாக இணையத்திலும், ஊடகங்களிலும் செய்திகள் தீயாய் பரவி வந்தன இதை குறித்து சிம்புவின் பெற்றோர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். நடிகர் சிம்பு நயன் தாராவை காதலித்து பிரிந்து அதன் பின்னர் நடிகை ஹன்சிகாவையும் காதலித்து பிரிந்தார். அந்த காதல் முறிந்ததில் சிம்புவுக்கு இன்று வரை வருத்தம்.
காரணம் காதல் முறிவுக்கு அவரோ, ஹன்சிகாவோ காரணம் இல்லையாம். இந்தநிலையில், பலரும் சிம்பு எப்போது தான் திருமணம் செய்துகொள்வார் என ரசிகர்களும், சினிமா வட்டாரங்களும் தொடர் கேள்விகளை எழுப்பி கொண்டே இருந்தது. இதையடுத்து, கொரோனா லாக்டவுன் முடிந்ததும் சிம்புவுக்கும், லண்டனில் வசிக்கும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவருக்கும் லாக்டவுன் முடிந்தவுடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் பரவின.
இதுகுறித்து சிம்புவின் பெற்றோர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்”. என கூறியுள்ளனர்.