வீட்டிற்குள் சேர்க்காத மனைவி… நள்ளிரவில் கணவன் செய்த அநியாயம்! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்

மனைவி தன்னை வீட்டிற்குள் சேர்க்காததால் கணவர் ஒருவர் ஆத்திரத்தில் வீட்டின் ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீவைத்ததில் பரிதாபமாக மனைவி மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்தவர் மகாபுல் அலி (40). இவரது மனைவி பெயர் கொரோசா பேகம் (40). இந்த தம்பதிக்கு அக்ரம் அலி(21) என்ற மகனும், மஜி(13) என்ற மகளும் உள்ளனர்.

கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கொரோசா பேகம் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்த நிலையில், திடீரென இவர்களது வீட்டில் அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அங்கு தீயில் எரிந்துகொண்டிருந்தவர்களை காப்பாற்றியுள்ளனர். இதில் கொரோசா பேகம் மற்றும் மகன் பலத்தகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

மகள் மஜி மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றார். பொலிசாரின் விசாரணையில் மகாபுல் அலிக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், கணவர் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த கணவரை கொரோசா வீட்டிற்குள் சேர்க்காததால் ஆத்திரத்தில் இரவு நேரம் ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap