திருமணமான 5 மாதத்தில் டிக்டாக்கில் புதுமாப்பிள்ளை செய்த விபரீத செயல்.. விசாரணையில் அதிர்ச்சி..!

கர்நாடகா மாவட்டம் துமகூரு மாவட்டம் கவுரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செய் (25). கடந்த 5 மாதத்திற்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர் டிக் டாக்கில் அடிக்கடி வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதேப்போல், கடந்த 6-ம் தேதி இரவு தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு சென்ற தனஞ்செய் அங்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து, அதை தன்னுடைய மொபைலில் வீடியோ எடுத்துள்ளார்.

அதில் தற்கொலை செய்துகொள்ளும் அனுபவத்தை தெரிந்து கொள்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை குடிப்பதாக அவர் பேசியிருந்தார்.

அதை டிக் டாக்கிலும் அந்த வீடியோவை அவர் வெளியிட்டிக்கிறார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து விரைந்து தோட்டத்திற்கு சென்று அங்கு உயிருக்கு போராடிய தனஞ்செயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மனைவியுடன் மகிழ்ச்சியாக திருமணம் நடத்திய தனஞ்செய் தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரிழந்தது தெரிய வந்தது.

Share via
Copy link
Powered by Social Snap