அடுத்த மரணம்! பிரபல சினிமா நடிகர், தொழிலதிபர் கொரோனாவால் பலி!! கண்ணீரில் குடும்பத்தினர் – சோகத்தில் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இதுவரை 72.58 லட்சம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.10 லட்சம் பேர் இதுவரை இறந்துள்ளனர்.

சினிமா பிரபலங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த சிலர் அண்மையில் கொரோனா பாதிப்பால் இறந்தனர். கேரளாவை சேர்ந்த சிலரும் மரணம் அடைந்துள்ளனர். இதில் ஒருவர் எஸ். ஏ. ஹாசன். இவர் ஹலோ துபாய்க்காரன் என்ற மலையாள படத்தை தயாரித்து நடித்திருந்தார்.

கேரளாவின் ஆலுவா பகுதியை சேர்ந்த இவர் துபாயில் டெக்ஸ்டைல் தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சார்ஜாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவரின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதை கண்டறிந்து செயற்கை சுவாசக்கருவி வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஹாசனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் இருக்கின்றனர். அவரின் மறைவால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap