எல்லையில் நடந்த கோலாகல திருமணம் : காதல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துகள்!!

தமிழக- கேரள எல்லையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர் ரோபின்சன்- பிரியங்கா ஜோடி. கேரளாவை சேர்ந்த பிரியங்காவுக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த ரோபின்சனுக்கும் கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

ஊரடங்கு உத்தரவால் கடந்த 7ம் திகதி திருமணத்தை நடத்தலாம் என பெரியவர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவரவர்களின் சொந்த மாவட்டங்களில் இபாஸ் பெற விண்ணப்பித்திருந்தனர். பிரியங்காவுக்கு இரு மாநிலங்களிலும் இபாஸ் கிடைத்த நிலையில், ரோபின்சனுக்கு கிடைக்கவில்லை. இந்த முறையும் திருமணத்தை தள்ளிப்போட வேண்டாம் என முடிவு செய்த பெரியவர்கள் தமிழக- கேரள எல்லையில் திருமணத்தை நடத்தலாம் என திட்டமிட்டனர்.

இதன்படி இருமாநில எல்லையில் திருமண சடங்குகளை முறையாக நடத்திய பின்னர் பிரியங்காவின் கழுத்தில் தாலி கட்டினார் ரோபின்சன். இவர்களை கேரள பொலிசார், சுகாதார மற்றும் சுங்கத்துறையினர் மனதார வாழ்த்தினர்.

Share via
Copy link
Powered by Social Snap