காட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த காதல்ஜோடி… காரணம் என்ன?

காட்டுக்குள் காதல் ஜோடியின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அலறிடித்து வந்துள்ள சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சவுரிநாதன். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒருவர் தான் சோபியா(21). இவர் தனியார் கல்லூரியில் பரதநாட்டியம் இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.

சோபியாவின் வீட்டின் பக்கத்தில் அவர்களுடைய சொந்தக்காரர் ராஜா என்பவரும் வசித்து வந்துள்ளார். ராஜாவின் மகன்களில் ஒருவர் ஆனந்தராஜ்(22). இவருக்கும், சோபியாவிற்கும் காதல் ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை அரூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் ஆனந்தராஜூம், சோபியாவும் சற்று அழுகிய நிலையில் பிணமாக காணப்படுவதாகவும், அவர்கள் பக்கத்தில் விஷ பாட்டில் இருந்ததையும் அவதானித்த சிலர் அவரது குடும்பத்திற்கும், பொலிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த பெற்றோர் கதறியழுது ஓடிவந்துள்ளனர். பின்பு பொலிசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலுக்கு சம்மதம் தெரிவித்தும், இரு வீட்டாருக்கும் எந்தவித பிரச்சினை இல்லாத நேரத்தில் இவர்களின் தற்கொலை எதனால் நடந்தது என்பது தெரியாமல் இருக்கும் குடும்பத்தினர், உடனே திருமணத்தை செய்து வைக்காததால், அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்திருப்பார்களோ என்று சந்தேகித்து வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap