சீரியல் நடிகை தற்கொலை! தலைமறைவான காதலனை சுற்றி வளைத்த போலிஸ் – நடிகையின் ஆசை இதுதானாம்

வாழ்க்கை பிரச்சனைகளால் சீரியல், சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அண்மையில் கன்னட டிவி சீரியல் நடிகை சந்தனா காதலன் தினேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என கூறி வீடியோ வெளியிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலன் மீதும் காதலனின் குடும்பத்தார் மீதும் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் சந்தனா இறந்தது குறித்து அவர் கடைசியாக வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த காதலர் தினேஷை தேடி வந்தது.

இறந்து போன சந்தனா கன்னட சினிமாவில் பெரிய நடிகையாக வரவேண்டும் என்ற கனவுடன் இருந்தாராம். மேலும் அவர் கடைசியாக நடித்துள்ள Quarter Life விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அவரை சுற்றி வளைத்து போலிசார் கைது செய்துள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap