மாமியாரைக் கர்ப்பமாக்கி மறைத்து வைத்த மருமகன்… இறுதியில் பூதாகரமாக வெடித்த பிரச்சினை!

உத்தர பிரதேசத்தில் மாமியாருடன் நெருங்கிப் பழகிய மருமகன் குழந்தை ஒன்றிற்கு தந்தையாகி, அதனை தனது மனைவியிடம் தத்தெடுத்த குழந்தை என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தினைச் சேர்ந்த தம்பதியினருக்கு 5 வருடமாக குழந்தை இல்லாத நிலையில், மனைவி கோவில் கோவிலாக சென்று குழந்தை வரம் கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென குழந்தையுடன் வீட்டிற்கு வந்த கணவர், குழந்தையில்லாமல் இனி கஷ்டப்பட வேண்டாம்… நான் தத்தெடுத்து வந்துவிட்டேன் என்று கூறி குழந்தையைக் கொடுத்துள்ளார். குழந்தையை வாங்கிய மனைவி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்க, கணவரின் நண்பர் போட்டு உடைத்த உண்மை மனைவிக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.

ஆம் இந்த குழந்தைக்கு தந்தை உங்களது கணவர் தான் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி குழந்தையின் தாய் அவரது மாமியார் என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். மருமகன், மாமியாருக்கு ஏற்பட்ட தொடர்பில் கர்ப்பமான மாமியாரை, யாருக்கும் தெரியாமல் தங்க வைத்துள்ள பார்த்ததோடு, இறுதியில் அவர் குழந்தையைப் பெற்றெடுத்ததும், தத்தெடுத்ததாக கூறி குழந்தையைக் கொண்டு வந்துள்ளார்.

மருமகனுக்கு அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க ஆசை மட்டுமின்றி அதை மனைவியிடம் கொடுத்து அவரது குழந்தை ஆசையைத் தீர்க்க இது நல்ல வாய்ப்பு என்று கருதியதால் மாமியாரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். தற்போது பரபரப்பாக பேசப்படும் இந்த சம்பவத்தில், மனைவி இப்போது என்ன முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. மாமியாரின் நிலை தெரியவில்லை.. ஆனால் கணவர் நிலைமைதான் ரொம்ப குழப்பமாக இருக்கிறதாக கூறப்படுகின்றது.

Share via
Copy link
Powered by Social Snap