பிக்பாஸ் சீசன் 4 தொடங்கும்.. எப்போது தெரியுமா?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ரிவி!

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். நிகழ்ச்சியின் முக்கிய அடையாளமாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இந்நிலையில் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருந்த பிக்பாஸ் சீசன் 4 கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் அதற்கான எந்த ஒரு திட்டமும் சம்மந்தப்பட்ட நிறுவனம் எடுக்காததால் பிக்பாஸ் 4 சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்றெல்லாம் தகவல் வெளியானது. இந்த நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள நெருங்கிய வட்டாரம், இப்பொழுது தான் கொரோனா ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டு சீரியல் ஷூட்டிங் நடத்துவதற்கான அனுமதி வழங்கியுள்ளனர்.

எனவே கூடிய விரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான திட்டம் போட்டு வேலைகள் துவங்கும் என கூறுகின்றனர். மேலும். தமிழில் பிக்பாஸ் என்றாலே எப்பவும் கமல் மட்டும் தான் தொகுத்து வழங்குவார் என தெளிவுபடுத்தியுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap