லாக்டவுனில் இன்ஸ்டாகிராம் மூலம் விராட் கோலி பெறும் வருமானம் எத்தனை கோடி தெரியுமா?..

உலகளவில் அதிகமாக சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பிடித்திருந்தார். விளையாட்டு வீரர்களுக்கு தங்கள் விளையாட்டுகளின் மூலம் இருந்து வரும் வருவாயை விட விளம்பரங்களில் நடிப்பதன் மூலம்தான் அதிக வருமானம் கிடைக்கிறது.

தற்போது, இப்போது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் ஸ்பான்சர்களின் விளம்பரங்களின் மூலம் சுமார் 3.6 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

அதிகமாக சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்திலும்(சுமார் 18 கோடி), மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும் (12.5 கோடி) உள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap