
2020ஆம் ஜனவரி மாதம் ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில் இந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கி ஜூலை 5ஆம் தேதி வரைக்குள் சரியாக 30 நாட்களில் 3 கிரகணங்கள் நிகழ்கின்றன.
2020ஆம் ஆண்டில் மொத்தம் 6 கிரகணங்கள் நிகழ்கின்றன. 2 சூரிய கிரகணம் நிகழ்கிறது ஜூன் 21ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.
முழு சூரிய கிரகணம் டிசம்பர் 14ஆம் தேதி நிகழும்.
ஜூலை 5ஆம் தேதியும் நவம்பர் 30ஆம் தேதியும் நிழல் சந்திர கிரகணங்கள் நிகழப் போகின்றன.
இதில் ஜூன் 5 முதல் ஜூலை 5 வரை 30 நாட்களுக்குள் 1 சூரிய கிரகணமும் 2 சந்திர கிரகணமும் நிகழ்வதுதான் சிறப்பு. இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்.
இந்த கிரகணங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு வரும் என்று பார்க்கலாம்.
மேஷம்
இந்த சூரிய கிரகணத்தினால் மேஷம் ராசிக்காரர்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும் லட்சியத்தை அடைவீர்கள்.
குடும்ப உறுப்பினர்களுடன் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்க பேச்சில் கவனமாக இருங்க. உங்க பேச்சை தவறாக புரிந்து கொள்வார்கள்.
எந்த வார்த்தையை பேசும் முன்பும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து பேசுங்கள்.
மிதுனம்
ஜூன் 21ஆம் தேதி நிகழப்போகும் சூரிய கிரகணம் மிதுனம் ராசியில் நிகழப்போகிறது. திடீர் இழப்புகள் நஷ்டங்கள் ஏற்படும்.
உடல் ரீதியான பிரச்சினைகளும் மனரீதியான பிரச்சினைகளும் ஏற்படும். உங்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கும்.
கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களின் 12வது வீட்டில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது.
மனரீதியாக பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் வரலாம். சில மாதங்களுக்கு உங்களுக்கு பணப்பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்கள்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, உங்களின் வருமானம் இந்த மாதம் அதிகரிக்கும்.
உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்களின் காதலை சொல்வதற்கு இது நல்ல நேரமல்ல பொறுமையாக இருங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் கிரகணம் நிகழும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்க தினசரி வேலையில் கவனமாக இருங்கள்.
தந்தை மகன் உறவில் சில சிக்கல்கள் வரலாம். எதையும் உணர்வுப்பூர்வமாக யோசிக்காதீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்து போட வேண்டாம். உங்களின் நம்பிக்கையை சீர் குலைக்கும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மீது தேவையில்லாத தவறான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பார்கள்.
உங்கள் நிதி நிலைமை மோசமடையும். உங்க குடும்பத்திற்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும்.
தனுசு
குருவை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்களின் உணர்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே பிரச்சினை வரும்.
பிசினஸ் செய்பவர்கள் முதலீடுகளை தவிர்க்கவும். உங்க பிசினஸ் பார்ட்னர்களால் சில பிரச்சினைகள் வரலாம்.
மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.
உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருக்கவும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் உங்களின் குழந்தைகளின் மீது கவனமாக இருங்கள். உணர்வு பூர்வமான முடிவுகளை கைவிடுங்கள். காதலிப்பவர்கள் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணத்தினால் சில பிரச்சினைகள் வரலாம்.
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சொத்துக்களை விற்கவோ வாங்கவோ முடிவு செய்யும் முன்பாக பலமுறை யோசிக்கவும்.