ஒட்டுமொத்த கிரகமும் ராகுவின் பிடியில்! ஆட்டிப்படைக்க போகும் கேது..! சனியின் கோர பார்வை எந்த ராசி மீது தெரியுமா?

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இந்த கால கட்டத்தில் சில பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கிறது.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சஞ்சரித்த சூரியன் மிதுனம் ராசிக்கு இடம் மாறி புதன், ராகு உடன் சஞ்சரிக்கிறார்.

ரிஷபம் ராசியில் சுக்கிரன், தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் குரு, சனி, கும்பம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த வாரமும் அனைத்து கிரகங்களும் ராகு கேதுவின் பிடியில் சிக்கியுள்ளன. மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

கடன் பிரச்சினைகள் தீரும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். நீங்க எதிர்பார்த்த வேலைகள் சாதகமாக அமையும். சிலர் வீட்டில் இருந்தே பார்க்கும் வேலைகளை உற்சாகமாக செய்வீர்கள்.

கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதுநாள் வரை ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். அதே நேரத்தில் அரசு மூலம் கிடைக்கக் கூடிய பலன்களில்சில தடைகள் ஏற்படலாம்.பிசினஸ் செய்பவர்கள், வியாபாரிகளுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டது.

வார இறுதியில் உங்க ராசி நாதன் செவ்வாய் விரைய ஸ்தானத்திற்கு வருவதால் செலவுகள் அதிகரிக்கும். உங்க வாழ்க்கைத்துணையிடம் மனசு விட்டு பேசுங்க பிரச்சினைகளை சால்வ் பண்ணுங்க. திருமணத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்கள் சுப காரியங்களை பேசி முடிவு செய்யலாம். மாணவர்கள் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. மேல்படிப்பு பற்றி முடிவு எடுக்கும் முன்பு பெற்றோர்களை கலந்து ஆலோசனை பண்ணுங்க.

ரிஷபம்

இந்த வாரம் உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் கவனமாகவும் இருக்கவும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும் வருமானம் நன்றாக இருக்கும் கூடவே செலவுகளும் வரும்.

தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். செய்யும் வேலையில் கவனமாகவும் உற்சாகமாகவும் வேலை பாருங்க. உடன் வேலை செய்பவர்கள் போட்டு தாக்க தயாராக இருக்காங்க கவனமாக இருங்க. எச்சரிக்கையாகவும் இருங்க.

வீண் வம்புகள் வரலாம். உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனமாக பேசுங்க. காதல் விவகாரங்களில் கவனமாக இருக்கும். ஏமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். மனதை அலைபாய விடாதீங்க. திருமணம் பற்றிய பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். இல்லத்தரசிகள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம். உற்சாக மனநிலையில் இருப்பீங்க.

மிதுனம்

ராசியில் உள்ள ராகு மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுப்பார். சூரியன் புதனோடு இணைந்து சக்தியை கொடுப்பார். முயற்சியை கை விடாதீர்கள். உங்க ராசியில் ராகு சூரியன் இணைவால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கங்க.

சகோதரர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகும், தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில், வெளிநாடு தொழில் செய்பவர்களுக்கு வெற்றியை தேடித்தரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சொந்த பந்தங்களுடன் கூடி மகிழும் உங்களுக்கு மேலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்ப வாழ்க்கை, காதல், திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒத்திப்போடுங்கள். பெண்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கணவருடன் சின்னச் சின்ன வாக்குவாதம் வரலாம்

அதை எளிதில் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் ஒருதடவைக்கு இருதடவை யோசித்து மேற்படிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கவும்.

கடகம்

இந்த வாரம் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம் அக்கறை காட்டுங்க. மருத்துவ செலவுகள் வரும். வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கும். தொழில் முதலீடுகளில்

கவனமாக முதலீடு பண்ணுங்க. பிசினஸ் பார்ட்னர்களிடம் பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க.

வியாபாரிகள், தொழிலதிபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு இந்த வாரம் ஆரம்பத்திலேயே சந்திராஷ்டமம் இருக்கிறது.

13.06.2020 பிற்பகல் 2.46 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க வீண் வம்பு வழக்குகளில் தலையிட வேண்டாம். வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க.

அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கவனமாக இருங்க. வேலை தேடும் இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். பெண்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புரமோசன் கிடைக்கலாம். வீட்டிலும் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பது பற்றிய ஆலோசனைகளில் உற்சாகமாக ஈடுபட்டிருப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, நீங்க இந்த வாரம் வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். உங்க ராசிநாதன் சூரியன் புதனோடு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். எதிரிகள் மூலம் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கும்.

பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் சில தொல்லைகள் வரலாம். நிறைய செலவுகள் வரலாம் கவனமாக இருங்க. சிம்மம் ராசிக்கு 13.06.2020 பிற்பகல் 2.46 மணி முதல் 16.06.2020 அதிகாலை 3.17 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த நாட்களில் மவுன விரதம்

இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க.

ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கூர்மையான பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர் விபத்துக்கள் வரலாம் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க நிதானமாக இருங்க. சுப காரிய தடைகள் ஏற்படும் என்பதால் நல்ல விசயங்களை பேச இது சரியான நேரமில்லை.

கன்னி

இந்த வாரம் உங்களுடைய குடும்பத்திற்கு சுப செலவுகள் வரலாம். வார மத்தியில் சூரியன் புதனோடு இணைவதால் வேறு வேலை மாறலாமா என்ற யோசனை வரும். நிறைய வருமானம் கிடைக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும் உங்க குடும்பத்திற்கான தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

கன்னி ராசிக்கு 16.06.2020 அதிகாலை 3.17 மணி முதல் 18.06.2020 அன்று பிற்பகல் 03.03 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க. வீட்டில் யார் கூடவும் கோபமாக பேசவேண்டாம். நிதானமாக இருங்க. வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. அஜீரண பிரச்சினைகள் வரலாம். மாணவர்களுக்கு குழப்பமான மனநிலை இருக்கலாம் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்துங்க. மனதளவில் சில குழப்பத்தையும் நிரந்தரமில்லாத நிலையையும் ஏற்படுத்தும்.

துலாம்

பாக்ய ஸ்தானத்திற்கு சூரியன் மாறுவதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. இந்த வாரம் உங்களுக்கு வாழ்க்கைத்துணைவரின் ஆதரவு கிடைக்கும் உடன் பிறந்தவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திடீர் செலவுகள், வீண் விரையங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பணம், நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்காதீங்க. பணம் கடன் கொடுக்காதீங்க. எந்த பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளுங்கள். இந்த வாரம் சவால்கள் அதிகம் வரும் சங்கடங்கள் அதிகம் வரும். வீண் விரைய செலவுகள் வந்தாலும் அதை சமாளிக்க வருமானமும் வரும்.

உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. மன உளைச்சலாகவும் இருக்கும் கவனமாக சமாளிங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இந்த வாரம் வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்க பேச்சில் கவனமாக இருங்க மற்றவர்களுக்கு புரியற மாதிரி பேசுங்க. வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

திடீர் நிதி நெருக்கடிகள் வரலாம். கடன் விவகாரங்கள் கையை கடிக்கும். பணம் வருவது போல இருந்தாலும் வர மாட்டேங்குதே என்று நினைப்பீர்கள். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும் சில நேரங்களில் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையாகவும் கடத்த வேண்டும்.

வார மத்தியில சூரியன் எட்டாம் வீட்டிற்கு நகர்ந்து புதனோடு இணைவதால் அரசு விவகாரங்களில் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க ஊடல் சரியாகி கூடலாகி விடும்.

தனுசு

பேச்சில் கவனமாக இருங்க சில சிக்கல்கள் வரலாம். அரசு வேலை, அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் வரும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும்.உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் நடைபெறும்.

பணம் கிடைக்கிறதே என்பதற்காக அதிகமாக கடன் வாங்காதீங்க சிக்கனமாக செலவு செய்யுங்கள். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். ஆறாம் வீட்டில் சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார். நீண்ட நாள் நிறைவேறாமல் இருந்த ஆசை நிறைவேறும். திடீர் விரைய செலவுகள் ஏற்படும்.

வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மனைவி மக்கள் மூலம் உதவி கிடைக்கும்.

இந்த வாரம் எந்த புதிய வேலைக்கும் மாறாதீங்க. கணவன் மனைவி இடையே நிறைய பிரச்சினைகள் வரலாம் சூடான பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.

மகரம்

இந்த வாரம் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். ரொம்ப சாதகமாக இருக்கும். அதே நேரத்தில் பணம் செலவு செய்வது மனதளவில் சோர்வடையச் செய்யும். கவலைப்படாதீங்க உங்க முதலீடுகள் லாபமாக மாறும் வரைக்கும் ரொம்ப பொறுமையாக இருங்க.

பிள்ளைகளால் செலவுகள் வரும். வேலையில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். உடல் ரீதியாக சில பிரச்சினைகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனமாகஇருங்க. சிலருக்கு மன உளைச்சல் வரலாம் இந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடிய நேரம் வரும்.

உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். பயணங்கள் போகும் போது கவனமாக இருங்க விழிப்புணர்வோடு இருந்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்.

கும்பம்

இந்த வாரம் சூரியன் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது செழிப்பான காலம் என்றாலும் ராகு, புதனோடு சூரியன் இணைவதால் தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.

உங்களுக்கு வேலை, தொழிலில் சில சவால்கள் வரலாம். அதை சாமர்தியமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடக்கவும். வேலை செய்யும் இடத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம்.

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சிலருக்கு தன லாபம் கிடைக்கும். பயணங்களில் கவனமாக இருங்க. வீட்டை நிர்வாகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சிஅதிகரிக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும் பிசினசில் நல்ல லாபம் கிடைக்கும்.மாணவர்களுக்கு மகிழ்ச்சியான வாரம்.

மீனம்

இந்த வாரம் உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.

இந்த வாரம் காதல் பயணங்களை வெற்றிகரமாக தொடங்குவீர்கள். சிலருக்கு திருமணம் கைகூடி வரும். சுப காரிய முயற்சிகள் வெற்றியை தேடித்தரும். உடல் ஆரோக்கியம் சாதாரணமாக இருந்தாலும் உணவு விசயத்தில கவனமாகவும் கட்டுப்பாடுடனும் இருக்கணும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

இல்லத்தரசிகளுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வீட்டில் மதிப்பு மரியாதை கூடும். கவனத்தோடு எதையும் கையாளுங்கள் இல்லாவிட்டால் திடீர் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்யும் விசயத்தில் கவனமாக இருக்கவும்.

Share via
Copy link
Powered by Social Snap