சூரிய பெயர்ச்சியால் கடுமையான சவால்களை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான சவால்களை சந்திக்கப் போகிறார்கள்? வரப்போகும் ஏழு நாட்களும் அற்புதமாக இருக்குமா? யாரெல்லாம் பிரச்சனையை எதிர்கொள்ளப் போகிறார்கள், யார் சந்தோஷ கடலில் மிதக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

அப்படியானால் வார ராசிப்பலன்களைப் படியுங்கள். கீழே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் கடன் பிரச்சனைகள் தீர்ந்து, பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுவரை ஏற்பட்ட தடைகள் அனைத்தும் நீங்கும்.

வார இறுதியில் ராசிநாதன் செவ்வாயால் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையிடம் மனம் விட்டு பேசுவதால் பிரச்சனைகள் சரியாகும். மாணவர்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உயர் கல்வி படிக்க விரும்புபவர்கள், பெற்றோர்களை கலந்தாலோசித்து முடிவு எடுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே சமயம் கவனமாகவும் இருக்க வேண்டும். லாபம் வரும் அதே சமயம் செலவுகளும் வரும். செய்யும் வேலையில் மிகவும் கவனமாகவும், உற்சாகமாகவும் இருங்கள். உடன் பணிபுரிபவர்களுடன் எச்சரிக்கையாக இருங்கள்.

உயர் அதிகாரிகளிடம் பேசும் போது கவனமாக இருங்கள். காதல் விஷயத்தில் கவனமாக இல்லாவிட்டால், ஏமாற்றமடையக்கூடும். உங்கள் மனதை அலைபாய விடாதீர்கள். திருமண பேச்சு வார்த்தைகளை சற்று தள்ளிப் போடுங்கள். மாணவர்களுக்கு நல்ல வாரம் இது.

மிதுனம்

மிதுன ராசியில் உள்ள ராகு பகவான் மனநிலையில் மாற்றத்தைக் கொடுப்பார். சூரியன் இன்று புதனுடன் இணைவதால், உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வேலையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமணம் செய்ய நினைப்பவர்கள், அதை தள்ளிப் போடுங்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வரலாம், இருப்பினும் அதை சமாளித்துவிடுவீர்கள். மாணவர்கள் மேற்படிப்பு தொடர நினைத்தால், நன்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிவரும். தொழிலில் முதலீடு செய்வதாக இருந்தால் கவனமாக இருங்கள். அதிகமாக முதலீடு செய்வதைத் தவிர்த்திடுங்கள். இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால், கவனமாக இருங்கள்.

வீண் வம்புக்கு போகாதீர்கள். பயணம் மேற்கொள்வதாக இருந்தால் கவனமாக இருங்கள். பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் வெளியே செல்வதைத் தவிர்த்திடுங்கள். அலுவல வேலையில் கவனமாக இருங்கள். சிலருக்கு உயர் பதவி கிடைக்கலாம். வீட்டில் செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள், இந்த வாரம் சூரியன் புதனோடு இணைந்து லாப ஸ்தானத்தில் இருப்பதால், உற்சாகமாக இருப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மற்றும் பிரச்சனைகள் நீங்கி முடிவுக்கு வரும். இந்த வாரம் நிறைய செலவுகள் வரலாம்.

சிம்ம ராசிக்கு இந்த வாரம் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்கள். சொல்லப்போனால் மௌன விரதம் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் காட்டுங்கள். கூர்மையான பொருட்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். இந்த வாரம் நிதானமாக இருப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் சுப செலவுகள் வரலாம். சூரியன் புதனோடு இணைவதால் வேலையை மாற்றலாமா என்ற எண்ணம் வரும். வருமானம் அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டம் தேடி வந்து, உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகும்.

இந்த வாரம் கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் ரொம்ப கவனமாக இருங்கள். யாருடனும் கோபமாக பேச வேண்டாம். ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்துங்கள். மாணவர்கள் குழப்பமான மனநிலையில் இருக்க வாய்ப்புள்ளதால், பெற்றோர்களுடன் மனம் விட்டு பேசுவது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! சூரியன் பாக்ய ஸ்தானத்திற்கு செல்வதால், அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இந்த வாரம் உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவும் கிடைக்கும். திடீர் செலவுகள் வரும்.

பணம் மற்றும் நகைகளை யாருக்கும் இரவலாக அல்லது கடனாக கொடுக்காதீர்கள். எதையும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளுங்கள். இந்த வாரம் அதிக சவால்கள் மற்றும் சங்கடங்களை சந்திப்பீர்கள். செலவுகள் வந்தாலும், அதை சமாளிக்க வருமானமும் வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பேசும் போது மற்றவர்களுக்கு புரிவது போன்று தெளிவாக பேசுங்கள். திடீர் நிதி நெருக்கடிகள் வரலாம். கடனாக கொடுத்த பணம் வரவில்லையே என்று நினைப்பீர்கள்.

வாரத்தின் மத்தியில் சூரியன் எட்டாம் வீட்டிற்கு நகர்ந்து புதனுடன் இணைவதால், அரசு விஷயத்தில் கவனமாக இருங்கள். பயணிக்கும் போது கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் அகலும். கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வரக்கூடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் பேசும் போது கவனமாக பேசுங்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் கிடைக்கிறது என்று அதிக கடன் வாங்காதீர்கள். எப்போதும் சிக்கனமாக செலவு செய்யுங்கள்.

நீண்ட நாள் நிறைவேறாமல் இருந்த ஆசை நிறைவேறும். திடீரென்று செலவுகள் ஏற்படும். வியாபாரம் மற்றும் வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையை மாற்ற நினைத்தால் தற்போது அந்த எண்ணத்தை கைவிடுங்கள். கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வரலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சாதகமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். அதே சமயம் அதிக செலவால் மிகவும் வருத்தம் கொள்வீர்கள். உங்கள் முதலீடுகள் லாபமாக மாறும் வரை பொறுமையை கையாளுங்கள்.

வேலையால் சிலருக்கு மன அழுத்தம் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கூட பிரச்சனைகள் ஏற்படலாம். இதையெல்லாம் தாண்டி சாதனை புரிய வேண்டிய நேரம் வரும். உங்களின் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் இந்த வாரம் அதிகரிக்கும். பயணங்களின் போது மிகவும் கவனமாக இருங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு செழிப்பான காலம் என்றாலும், தொழில் முதலீடுகளில் விழிப்போடு இருப்பது அவசியம். இந்த வாரம் சில சவால்களை சந்திக்கலாம். இருப்பினும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடங்கள்.

வேலையில் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இந்த வாரம் சிலருக்கு லாபம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் தைரியமாக கையாளுவீர்கள். உங்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதல் வாழ்க்கை குதூகலமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியைத் தரும். உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமாக செயல்படுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் மதிப்பும் மரியாதையும் கூடும். கவனமாக இந்த வாரம் இல்லாவிட்டால், சிக்கலில் மாட்டி தவிப்பீர்கள்.

Share via
Copy link
Powered by Social Snap