தற்கொலை செய்துகொண்ட சுஷாந்தி சிங்கின் 50 ஆசைகள் என்ன தெரியுமா?.. ரசிகர்களின் வேதனை…!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், 2016ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட M.S. Dhoni: The Untold Story திரைப்படத்தில் அவரது நடிப்பின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்திருந்தார்.

தோனியின் ஸ்டைஸ், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்ட முறை என்று அவரின் அனைத்தையும் கண் முன்னே கொண்டுவந்திருப்பார். அப்படத்தில், வாழ்வில் இளைஞர்கள், தங்களது ஆசையையும் லட்சியத்தையும் அடைய கடுமையாக போராட வேண்டும் என இளைஞர்களுக்கு உணர்த்திய நடிகர் சுஷாந்த் சிங்கிற்கும் வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது. ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் இயற்கை எய்தியுள்ளார்.

அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்… 50 ஆசைகள்: தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் கடந்த 2019ம் ஆண்டு தனது வாழ்வின் 50 கனவுகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து அதனை நிறைவேற்றி கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அதில், விமானத்தை இயக்க வேண்டும், சிறு குழந்தைகள் விண்வெளி குறித்து அறிந்துகொள்ள உதவ வேண்டும்.

கைலாய மலையில் தியானம் செய்ய வேண்டும், வெடிக்கும் எரிமலை அருகே படம்பிடிக்க வேண்டும், 1000 மரங்கள் நட வேண்டும், பண்ணை தொழில் செய்ய கற்க வேண்டும், லம்போர்கினி கார் வாங்க வேண்டும், விவேகானந்தர் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும், இலவச புத்தகங்கள் கிடைக்க சேவை செய்ய வேண்டும், உள்ளிட்ட 50 கனவுகளை நடிகர் சுஷாந்த் தெரிவித்திருந்தார்.

தான் குறிப்பிட்ட 50ல் 12 கனவுகள் நிறைவேற்றிய நடிகர் சுஷாந்த் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் ட்விட்டரில் பதிவுகள் ஏதும் செய்யவில்லை. கடைசியாக 2019 டிசம்பர் 27ம் தேதியன்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்நிலையில், அவரின் மீதி கனவுகளை நிறைவேற்றினாரா என்பதும், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

எது எப்படியோ, தங்களுக்கு வாழ்வின் கனவுகளை அடைய கடும் முயற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய சுஷாந்த் இது போன்ற ஒரு முடிவை எடுத்திருக்க கூடாது என ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap