திருமணமாகமல் 750 படங்களுக்கு மேல் நடித்த கோவையின் மிரளவைக்கும், மறுபக்கம் தெரிந்தால் ஆச்சரியபடுவீங்க…!!

முக்கியத் துணை வேடங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார். 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில் தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவுக்கு பிறகு காமெடியில் கொடி கட்டி பறப்பவர் என்றால் அது கோவை சரளாதான்.

காமெடி நடிகையாலும் கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியும் என்று நிரூபித்தவர்.1983ல் பக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார்.

அதன்பிறகு பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார்.இருந்தாலும் கரகாட்டக்காரன் படம் இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து வடிவேலுவுடன் இவர் நடித்த படங்கள் அனைத்தும் காமெடியின் உச்சமாக இன்றளவும் உள்ளது.

சுமார் 750 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் இவருக்கு 2008க்கு தமிழில் சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.பின்னர் 2011 முதல் காஞ்சனா படம் மூலம் இரண்டாவது ரவுண்டை தொடங்கி வலம் வருகிறார். இப்போதும் தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து கொண்டுள்ளார்.

இவருடன் பிறந்தவர்கள் 4 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த கோவை சரளா, இவர் மட்டும் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

உடன் பிறந்தவர்களின் குழந்தைகளை தனது குழந்தைகளாக பாவித்து வளர்த்து வருகிறார்.பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். மேலும் பல வயதானவர்களின் நலனுக்காகவும் பாடுபட்டு வருகிறார்.

Share via
Copy link
Powered by Social Snap