விபரீதத்தில் முடிந்த விளையாட்டு : குக்கரில் மாட்டிக் கொண்ட குழந்தை : அடுத்து நடந்த பரபரப்பு!!

கு ழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக குக்கரில் சிக்கிக் கொண்ட ச ம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளின் விளையாட்டுத் தனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது. இது சில சமயங்களில் விபரீதமான நிலைக்கும் இட்டுச் செல்கிறது. எனவே பெற்றோர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தவொரு வேலை செய்து கொண்டிருந்தாலும் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருப்பது அவசியம். இந்நிலையில் குஜராத் மாநிலம் பவா நகரில் பிரியன்ஷி வாலா என்ற ஒரு வயது பெண் குழந்தை குக்கரை வைத்து நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத வகையில் குக்கரில் தலை சிக்கிக் கொண்டது. இதைக் கண்டு அ திர்ச்சி அடைந்த பெற்றோர் குக்கரை எடுக்க முயற்சித்தனர். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டாரும் ஓடி வந்தனர்.

பலரும் மாறி, மாறி முயற்சித்ததில் கு ழந்தையின் தலையில் கா யங்கள் ஏற்பட்டன. மேலும் தலை வீக்கமடையத் தொடங்கியது. இதனை உணர்ந்த பெற்றோர் உடனே அருகிலுள்ள சர் டி மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். எவ்வளவோ முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து பாத்திரங்கள் பழுது பார்ப்பவரை அழைத்து வந்தோம். அவர் குக்கரை வெட்டி எடுத்து குழந்தையின் உ யிரை கா ப்பாற்றினார். முன்னதாக வீட்டில் குழந்தையின் தலையை எடுக்க முயன்று கா யங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே கு ழந்தையை தொடர் க ண்காணிப்பில் வைத்திருக்கிறோம். மூளைக்கு செல்லும் ரத்தம், தலைப் பகுதியில் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று கவனித்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap