
தமிழ் திரைப்பட ஹீரோ ஆதி தனது தந்தைக்கு முடிவெட்டி, ஷேவிங் செய்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
இந்த வீடியோவில் அவர் தந்தைக்கு முடி வெட்டி விட்டு அழகு பார்க்கும் போது, தந்தை அவருக்காக பணம் கொடுத்தார்.
முதலில் அந்த பணத்தை வேண்டாம் என்று ஆதி மறுக்கிறார்.
ஆனால் தந்தை வலுக்கட்டாயமாக பணம் கொடுக்க முயற்சிக்கும் போது தந்தையின் மணிபர்சை பிடுங்கி அதில் இருந்து அவரே ஒரு தொகையை எடுத்துக் கொள்வது போன்ற காட்சி அந்த வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.