வெங்காயத்தினை யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா? மீறினால் ஆபத்து! இதை இப்படி தேய்ச்சா தலைமுடி கிடுகிடுனு வேகமா வளரும்?

நாம் பெரும்பாலும் சமையலில் பெரிதும் பயன்படுத்தும் பொருள் இந்த சின்ன வெங்காயம் தான். இந்த வெங்காயத்தில் பல வகைகள் காணப்படுகிறது.

இனம் ஒன்றாக இருந்தாலும் தோற்றத்தை பொருத்து வேறுபடுகின்றன.

வெங்காயத்தின் நன்மைகள்

வெங்காயத்தில் அதிகளவு இரும்புச் சத்து,காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
இதனால் இது இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, எல்லா உடல் உறுப்புகளுக்கும் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது.

உடல் ஆற்றலுக்கும், செல்களின் வளர்ச்சிக்கும் துணை புரிகிறது.
இந்த வெங்காயத்தில் அல்சின் என்ற பொருள் உள்ளது. இது உங்கள் உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

இதில் உருவாகும் என்சைம்னான ரிடெக்டேஸ் கல்லீரலில் தங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.
இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதால் இதயத்திற்கு நல்லது. ஏனெனில் கொலஸ்ட்ரால் அளவு குறையும் போது பக்கவாதம், ஆந்த்ரோக்ளிரோஸஸிஸ், கரோனரி இதய நோய்கள், ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

அல்லியம் மற்றும் அல்லில் டிஸல்பைடு, வெங்காயத்தில் காணப்படும் இரண்டு பைட்டோ கெமிக்கல் கலவைகள்.
இந்த இரண்டு பைட்டோ கெமிக்கல்கள் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

இவை இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.

வெங்காயத்தில் அதிகளவு கால்சியம் சத்து இருப்பதால் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது. எனவே அடிக்கடி நீங்கள் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உங்கள் எலும்புகள் வலிமையாக ஆரோக்கியமாக இருக்கும்.

அழகு குறிப்பு

இது மட்டுமல்லாமல் வெங்காயத்தின் தோல் மட்டும் வெங்காயம் கூந்தலுக்கும், சருமத்திற்கும் சிறந்தது.
வெங்காயத்தினை நன்கு அரைத்து சாற்றினை எடுத்து தலைக்கு மசாஜ் செய்து குளித்து வர முடி நன்கு வளரும்.

பக்க விளைவுகள்

இரத்தக் கசிவு உள்ளவர்கள் வெங்காயத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.
இது இரத்தம் கட்டுதலை தடுத்து அதிகமாக இரத்தக் கசிவு ஏற்பட செய்து விடும்

குறைந்த இரத்த சர்க்கரை கொண்டவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் போது மேலும் இரத்த சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap