
இரண்டு குட்டி குரங்குகள் இணைந்து ஒருவருக்கொருவர் நான் இருக்கின்றேன் கவலை கொள்ளாதே என ஆறுதலூட்டும் வகையில் கட்டிப்பிடித்து அரவணைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், குரங்குகளின் அன்பான இந்த செயலுக்கு 1000 அர்த்தங்கள் உள்ளது.ஒரு அழகான கட்டிபிடித்தலில் மிக ஆழமான மன தைரியம் கிடைக்கும் என ஒரு வரியில் அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.