
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சச சுறா மீனின் பல்லை அமெரிக்க தம்பதி ஒன்று கண்டுபிடித்துள்ளனர்.
பல அரிய வகை உயிரினங்கள் கடலில் இருக்கின்றன. அதில் ஒன்று தான் சுறா மீன்கள். கடலில் மீக ஆபத்தான மீன் என்றால் அது சுறா தான்.
மிக நீளமாக இருக்கும் அதன் பற்கள் மனிதர்களைக்கூட மிக எளிதாக வேட்டையாடிவிடும்.

இந்நிலையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மெகாலோதன் எனும் ராட்சச சுறா மீனில் பல் ஒன்றை அமெரிக்க தம்பதி கண்டுபிடித்துள்ளனர்.
தெற்கு கரோலினாவை சேர்ந்த ஜெஸிகா ரோஸ் மற்றும் அவரது கணவர் சைமன் ஆகியோர் ஸ்டோனா ஆற்றங்கரை ஓரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு மிருகத்தின் ராட்சச பல் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். 5.75 இஞ்ச் நீளத்தில் 450 கிராம் எடை கொண்ட அந்த பல், சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மெகாலோதன் எனும் ராட்சச சுறா மீனின் பல் என அவர்கள் கணித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
