அக்காக்களின் செல்லப்பிள்ளையாக இருந்த சுஷாந்த்… மாமாவின் இறப்பிற்கு 5 வயது மருமகன் கூறியது என்ன தெரியுமா?

நடிகர் சுஷாந்தின் மறைவிற்கு, அவரது 5 மருமகன் தனது அம்மாவிற்கு ஆறுதல் கூறியுள்ளது தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுகிழமை மனஅழுத்தம் காரணமாக தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுஷாந்தின் அக்கா ஸ்வேதா அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஸ்வேதா தன் மகன் நிர்வானிடம் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு சிறுவன் கூறியதை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். ஸ்வேதா ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, மாமு இறந்துவிட்டார் என்று நிர்வானிடம் கூறினேன். அதற்கு அவனோ, ஆனால் அவர் உங்கள் இதயத்தில் வாழ்கிறார் என்று 3 முறை கூறினான்.
ஒரு 5 வயது குழந்தை இப்படி கூறினால் நாம் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும். அனைவரும் தைரியமாக இருங்கள்… குறிப்பாக சுஷாந்தில் ரசிகர்களுக்கு, அவர் உங்கள் இருதயத்தில் என்றும் இருக்கின்றார் என்று கூறியுள்ளார்.

சுஷாந்தின் அக்காவின் பதிவிற்கு ரசிகர்கள், அவரது சாந்தியடையட்டும், தம்பியை இழந்து தவிக்கும் உங்களுக்கு கடவுள் தைரியத்தை கொடுக்கட்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஸ்வேதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது, நான் உடனே இந்தியாவுக்கு செல்ல வேண்டும். விமான டிக்கெடெ் கிடைக்கவில்லை. யாராவது உதவி செய்ய முடிந்தால் தயவு செய்து என்னிடம் தெரிவிக்கவும் என்றார்.

பின்னர் அவர் கூறியதாவது, அனைவரின் உதவியாலும் இந்தியாவுக்கு டிக்கெட் கன்ஃபர்ம் ஆகிவிட்டது. நான் 16ம் தேதி செல்கிறேன். டெல்லி வழியாக மும்பையை சென்றடைவேன். 7 நாட்கள் குவாரன்டைனை நினைத்து தான் கவலையாக உள்ளது. குவாரன்டைனில் இல்லாமல் இருக்க ஏதாவது வழி உண்டா?. என் குடும்பத்தாரை விரைவில் சந்திக்க வேண்டும் என்றார்.

ஆனால் ஸ்வேதாவால் சுஷாந்தின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியவில்லை. கடைக்குட்டியான சுஷாந்திற்கு நான்கு அக்காக்கள். அம்மா இல்லாததால் அக்காக்களின் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறார் சுஷாந்த்.

கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் அதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டு விடயம் அவரது குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. கடைசி தருணத்தில் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் இவ்வாறான விபரீத முடிவை எடுத்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இறுதியாக அவரது அக்காவிடம் போன் பேசியுள்ளார் பின்பு தன் நண்பர் மகேஷ் ஷெட்டிக்கு போன் செய்த போது, போனை எடுக்கவில்லையாம்.

Share via
Copy link
Powered by Social Snap