இன்றைய ராசிபலன் – 18.06.2020

மேஷராசி அன்பர்களே!

காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பழநியாண்டவரை வழிபட வாட்டம் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

ரிஷபராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இன்று பத்மாவதி தாயாரை தியானித்து நாளைத் தொடங்குவதன் மூலம் செலவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

மிதுனராசி அன்பர்களே!

சாதகமான நாள். தொட்டகாரியங்கள் வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருப்பார். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகப் பணிகளில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.அம்பிகையை வழிபட சங்கடங்கள் தீரும்.

கடகராசி அன்பர்களே!

தந்தை வழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். துர்கையை வழிபட எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

கன்னிராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உடல் நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். அதிகாரிகளிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். சிவபெருமானை வழிபட சோர்வு நீங்கி உற்சாகம் பெற முடியும்.

துலாராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். உங்கள் முயற்சி களுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் குடும்பத்துடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்களில் சிறுசிறு தடைகள் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். வியாபாரத் தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். அம்பிகையை வழிபட தடைகள் விலகும்.

தனுசுராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். இன்று பிரச்னைகள் நீங்க, நீங்கள் தியானித்து வழிபடவேண்டிய தெய்வம் விநாயகர்.

மகரராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று ஷீர்டி சாய்பாபாவை வழிபட சந்தோஷம் அதிகரிக்கும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. சக ஊழியர்களுக்கு பணிகளை முடிப்பதில் சில தடைகள் ஏற்படும் என்பதால் அவர்களுடைய பணிகளையும் நீங்களே செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். முருகப்பெருமானை வழிபட மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.

மீனராசி அன்பர்களே!

பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று ஆஞ்சநேயரை தியானித்து வழிபட மற்றவர்களுடன் சுமுகமான உறவு ஏற்படும்.

Share via
Copy link
Powered by Social Snap