
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் உள்ள அவரது வீட்டில் த ற்கொ லை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. இ ளம் வ யதில் ந டிகர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அ திர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 6 மாதங்களாக ம ன அ ழுத்தத்துடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. சீரியிலில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் அதன்பின் பெரியத்திரைக்கு அறிமுகமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்டு ஸ்டோரி’ படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர்.
நடிகர் சுஷாந்த் சிங்கின் ம றைவிற்கு திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே நடிகர் சுஷாந்த் சிங் ம றைவு செய்தியை கேட்டு தோனி மிகவும் மனவேதனை அடைந்ததாக ‘எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி’ படத்தின் இயக்குனர் நீரஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இந்தப் படம் தனது வாழ்க்கையில் மிக முக்கிய படம் என்பதை உணர்ந்திருந்த சுஷாந்த்சிங் அந்த படத்திற்காக தனது அதிகபட்ச உழைப்பை கொட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தோனி படத்தின் இணை தயாரிப்பாளரும் தோனிக்கு நெருங்கிய நண்பருமான அருண் பாண்டே என்பவர் கூறியபோது தோனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்த முயற்சி எடுத்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த முயற்சியை கைவிடுவதாக தெரிவித்துள்ளார்.
சுஷாந்த்சிங் இல்லாமல் ’தோனி 2’ படத்தை உருவாக்கவே முடியாது என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாக கூறிய அருண்பாண்டே, சுஷாந்த்சிங் உயிருடன் இருந்து ’தோனி 2’ திரைப்படம் உருவானால் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப் படம் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும் என்றும், அந்த பாக்கியம் இனி இல்லை என்றும் கூறியுள்ளார்.