டீ குடிக்க கூட காசில்லாமல் வறுமையில் பரிதவிக்கும் நடிகை! உயிருக்கு போராடிய நிலையில் விட்டு சென்ற கணவர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

காசநோயால் பாதிக்கப்பட்ட நடிகை பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வரும் தகவல் அறிந்து பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த பூஜா தட்வாலுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.
அவர் கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள காசநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதைத் தெரிந்து கொண்ட பூஜாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதனை எதிர்ப்பார்க்காத பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வருகிறாராம். மருத்துவமனையில் உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

காசநோய் பாதிப்பால் பரிதவித்து வரும் பூஜா தனக்கு நடிகர் சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக கூறியிருக்கிறாராம்.

Share via
Copy link
Powered by Social Snap