மொட்டை மாடியிலிருந்து திரும்பிய தாய்! அறையில் துடிதுடித்த நிலையில் மகள்… சுஷாந்தின் இறப்பால் நேர்ந்த மற்றொரு துயரம்

பீகார் மாநிலம், பாட்னா பகுதியில் ராஜேந்திர நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சன்குமார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்தமகள் இஷிகா குமாரி.
பத்தாம் வகுப்பு படித்த இவர், தல தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பைப் பெற்ற நடிகர் சுஷாந்தின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் சுஷாந்த் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில், இஷிகா மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

மேலும் அவரது இறுதிசடங்கு வீடியோக்களை பார்த்து அழுது கொண்டே இருந்துள்ளார். அவரது அம்மா எவ்வளவோ கூறியும் சமாதானம் அடையவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இரவில், இஷிகாவின் தாய் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அப்பொழுது வீட்டிலிருந்த இஷிகா, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தொங்கியுள்ளார்.

இதனை கண்ட இஷிகாவின் தாய் கதறி துடித்துள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு மருத்துவர்கள், இஷிகா உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு குறித்த மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்த இஷிகா சுஷாந்த் மரணத்தால்மேலும்மனவேதனையடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap