வீரமரணம் அடைந்த மகன்.. என்னுடைய 2 பேரன்களை அனுப்புவேன்.. கலங்க வைத்த தந்தையின் வீடியோ!

இந்திய எல்லையில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதனால், நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வீர மரணம் அடைந்த பீகாரை சேர்ந்த இந்திய வீரர் குந்தன் குமாரின் தந்தை அளித்துள்ள பேட்டி அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைத்திருக்கிறது.

அதில், ”என்னுடைய மகன் வீர மரணம் அடைந்து விட்டான். எனக்கு இரண்டு பேரன்கள் இருக்கின்றனர். அவர்களை ராணுவத்திற்கு அனுப்பி வைப்பேன்,” என உணர்ச்சி வசத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

Share via
Copy link
Powered by Social Snap