
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தளபதி விஜய். இவர், இயக்குனரின் மகனாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் பல்வேறு விமர்சனங்களையும் தடைகளையும் தாண்டி இன்று உச்சம் அடைந்து உள்ளார்.
இந்நிலையில், விஜய் ஹீரோவாக நடித்த முதல் படத்தை பற்றி பத்திரிக்கைகள் கண்ணா பின்னா என விமர்சனங்கள் செய்தனர்.
இதெல்லாம் ஒரு மூஞ்சி வாயா இதெல்லாம் ஹீரோவா நடிக்க வந்து விட்டேன் என்று பத்திரிகைகள் அவரை விளாசி எடுத்துள்ளன. அதிலும் மிகப்பெரிய பத்திரிக்கை ஒன்று அவரை அளவில்லாமல் தாக்கியது.
இப்படியான விமர்சனத்தால் தளபதி விஜய் ஒரு நாள் இரவு முழுவதும் கண்ணீர் விட்டு கதறி அழுததாக அவரின் நண்பரும் சீரியல் நடிகருமான சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விஜய்யை எந்த பத்திரிக்கை மோசமாக விமர்சனம் செய்ததோ அதே பத்திரிக்கை இன்று அவரின் புகைப்படம் தான் அட்டை பக்கத்தில் இருக்க வேண்டும் என்று கேட்கிறது எனவும் பெறுமையாக கூறியுள்ளார் சஞ்சீவ்.