திருடியவுடன் இளைஞர் அழுததும் மனசு கேக்காம திருடர்கள் செய்த வேறலெவல் காரியம்! மில்லியன் இதயங்களை வென்ற சீ சீ டிவி காட்சி

ஆன்லைன் பொருட்களை விநியோகம் செய்யும் டெலிவரி பையனிடம் வழிப்பறி செய்த திருடர்கள் அவர் அழுததால் பொருட்களை திரும்பிக் கொடுத்துவிட்ட சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் பாகிஸ்தானில் கராச்சியில் இடம்பெற்றுள்ளது.
கராச்சியில் உள்ள வீட்டில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட ஆன்லைன் பொருட்களை விநியோகம் செய்த டெலிவரி பையன் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது,

அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 திருடர்கள், ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவனிடம் இருந்த பொருட்களை பறிக்க முயற்சி செய்தனர்.

ஆனால் டெலிவரி செய்த இளைஞர் தன்னுடைய வறுமை நிலையைக் கூறி அழுததால், மனமிறங்கிய திருடர்கள், வழிப்பறி செய்த பொருட்களை அவனிடமே திருப்பிக் கொடுத்ததுள்ளனர்.
டெலிவரி பையனை கட்டித் தழுவி, ஆறுதல் சொல்லிச் சென்றுள்ளனர். இப்படியும் திருடர்கள் என்று இணையத்தில் இந்த வீடியோவை பார்க்கும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap