மரத்தால் ஆன உருவ பொம்மையுடன் இளைஞருக்கு திருமணம்… இதற்கு தந்தை கூறும் காரணம் என்ன தெரியுமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நபர் ஒருவருக்கு மரத்தால் செய்யப்பட்ட உருவ பொம்மையுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷிவ் மோகன்(90) என்பவருக்கு மொத்தம் 9 ஆண் பிள்ளைகள். இதில் எட்டு மகன்களுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில் தனது கடைசி மகனுக்கு தான் இந்த வினோத திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்ட மரத்தால் ஆன உருவபொம்மையின் அருகில் மணமகன் அமர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்றுள்ளது.

இந்த வினோத திருமணத்திற்கு இளைஞரின் தந்தை கூறிய தகவல் என்னவெனில், நான் இறப்பதற்கு முன் எனது 9 மகன்களின் திருமணத்தையும் நடத்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
எனது கடைசி மகனுக்கு சொத்து எதுவுமில்லை.

அது மட்டுமில்லாமல் அவன் அறிவாளியாகவும் இல்லாமல் இருந்ததால் தான் அவனுக்கு இந்த வினோத திருமணத்தை செய்ய நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உருவபொம்மையுடன் வாலிபருக்கு நடைபெற்ற திருமணத்தில் அந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap