3 முட்டைகளை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி கின்னஸ் சாதனை- குவியும் பாராட்டுக்கள் (காணொளி)

கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  

5 வினாடிகளில் குறித்த சாதனையை செய்து முடிக்கப்பட வேண்டும் என்றும், மூன்று முட்டைகளும் புதியனவாக இருத்தல் வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகளை கின்னஸ் அமைப்பு விதித்திருந்தது.   இந்த இளைஞர் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு 3 முட்டைகளையும் செங்குத்தாக அடுக்கி வைத்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்.   

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், பொறுமை, பயிற்சி மற்றும் ஒருமுகத்தன்மை ஆகியவை இருந்தால் மட்டுமே இந்த சாதனை சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.

Share via
Copy link
Powered by Social Snap