
தமிழ்நாட்டின் சென்னையில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. ஏழை பணக்காரன் என்ற எந்தவொரு பேதமுமின்றி இவ்வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்கள் அதிகம் வசித்துவரும் கோடம்பாக்கம் வளசரவாக்கம் போன்ற இடங்களில் அதிக பாதிப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தன்னைத் தானே தனிமைப் படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன் உள்ளிட்டோரும் கொரோனா அறிகுறியால் தங்களை தனிமைப் படுத்திக்க கொண்டுள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைந்த, பிரபல பாடகர் ஏ.எல்.ராகவனும், முதலில் மாரடைப்பால் இறந்ததாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது அவரது மறைவிற்கு கொரோனா தான் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது மனைவி எம்.என்.ராஜத்திற்கும், கொரோனா இருப்பதாகவும் அவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.