சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள் : ஆபூர்வ காட்சியின் புகைப்படங்கள்!!

உலகின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட நிலையில், தமிழகத்தின் தருமபுரியில் இந்த கிரகணம் காரணமாக உலக்கை செங்குத்தாக நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பூமி, சூரியன், நிலவு ஆகியன நேர்க்கோட்டில் வருவதுதான் சூரிய கிரகணம். ஆபூர்வமான சூரிய கிரகணமாக இது பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கிரகணம் இன்று இந்தியாவில் நேற்று காலை 9.58 மணிக்கு துவங்கியது.

சுமார் 6 மணி நேரம் இந்த நிகழ்வு நீடித்தது. இது இந்தியாவில் தெரியும் கடைசி சூரிய கிரகணம் ஆகும். இதன் பின்னர் அடுத்த கிரகணம் வரும் 2022 ஆம் ஆண்டுதான் இந்தியாவில் தெரியும்.

இந்த நிலையில் கிரகணத்தின் போது தமிழகத்தின் தருமபுரியில் உலக்கை செங்குத்தாக நிற்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பொதுவாக உலக்கையின் முனை தட்டையாக இருக்காது. அதனால் இது செங்குத்தாக நிற்க வைக்க முடியாது. ஆனால் கிரகணத்தின்போது இந்த உலக்கை செங்குத்தாக நிற்கும்.

கிரகணம் முடிந்த பிறகு இது தானாக விழுந்துவிடும். பழங்காலங்களில் இது போன்ற செய்முறை விளக்கங்கள் மூலமே கிரகணம் ஏற்படுவதையும் முடிவதையும் மக்கள் கண்டறிந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கிராமப்புறங்களில் உலக்கையை நிற்க வைப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது மட்டுமின்றி, அம்மிக்கல்லையும் கிராம மக்கள் செங்குத்தாக நிற்க வைப்பர். அம்மிக்கல்லின் முனையும் தட்டையாக இருக்காது.

எனினும் அந்த அம்மிக்கல்லும் கிரகணத்தின் போது நிற்கும். அது போல் நெல்லை, திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உலக்கையை செங்குத்தாக நிற்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் தாம்பால தட்டில் ஆரத்தி கரைக்கப்பட்டு அதில் உலக்கையை அங்கிருக்கும் மக்கள் நிற்க வைத்துள்ளனர். அது தொடர்பான வீடியோக்களும், அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Share via
Copy link
Powered by Social Snap