வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட டிக்டாக் பிரபலம் சூர்யா..!மன அழுத்தத்தால் எடுத்த விபரீத முடிவு…!

திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரிநகர் பகுதியில் குடியிருந்து வருபவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக் செயலியில் சூர்யா என்ற பெயரில் செய்த சேட்டைகள் காரணமாக ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டார்.

பின்னர் இதையே தனது பெயராகவும் மாற்றிக் கொண்டு சமூக வலைதளங்களில் வலம் வந்தார்.இவர் சிங்கப்பூர் சென்றிருந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனையடுத்து அங்கேயே இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் சிக்கி இருப்பதை அறிந்த அரசு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்தது. இந்த சிறப்பு விமானம் மூலம் தமிழகம் வந்த சூர்யா கடந்த 16ம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

இவரை கண்ட அக்கம் பக்கத்தினர் கொரோனா பீதியால் போலீசாருக்கும் சுகாதார துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் இவரை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் தனக்கு கோவையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே தன்னை அனுப்பி வைத்தனர். என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்னர் ஆம்புலன்சில் ஏற மாட்டேன் இருசக்கர வாகனத்திலேயே வருவதாக தெரிவித்தார்.

மேலும் தான் ஏசி அறையிலேயே இருந்துவிட்டேன் தமிழகத்தில் அடிக்கும் வெயிலில் இவர்களிடமிருந்து தனக்கு கொரோனா பரவி விடுமோ என்று பயமாக உள்ளதாகவும் தனக்கு அரசு மருத்துவமனையில் தனி அறை உணவு வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்ததால் அரசு மருத்துவமனையில் கொரோனா மாதிரி சேகரிப்பு பணி செய்யமுடியாமல் போனது. மீண்டும் இரவு திருப்பூர் ரயில் நிலையம் அழைத்து சென்ற சுகாதார துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

மேலும் இவரின் வீட்டின் முன்பு தனிமைபடுத்தப்பட்டவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை தனது வீட்டில் சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Share via
Copy link
Powered by Social Snap