பெண்களுக்காக தயாரிக்கப்பட்ட கொரோனா ஜிமிக்கி… கடைக்காரருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களால் முடிந்த விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டையில், கொரோனா வைரஸ் வடிவில், தங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஜிமிக்கி, கம்மல், பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில், நகைக்கடை மற்றும் நகை பட்டறை வைத்திருப்பவர் வீரமணி.

இவர், கொரோனா வைரஸ் வடிவில், 2 கிராம் முதல், 4 கிராம் வரை ஜிமிக்கி, கம்மல் ஆகியவற்றை தயாரித்து, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் தயாரித்த கொரோனா ஜிமிக்கி கம்மலுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் அவர் வடிவமைத்த ஜிமிக்கி, கம்மலை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது, பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, இதேபோன்று தயாரித்துத் தருமாறு பல்வேறு அழைப்புகள் வருகின்றன. தற்போது, பிற நகைகள் தயாரிப்பதை விட கொரோனா ஜிமிக்கி, கம்மல் தயாரிக்கும் பணியை தீவிரமாக செய்து வருவதாக தெரிவித்துள்ளார் வீரமணி.

Share via
Copy link
Powered by Social Snap