11 வயது சிறுமியின் கண்களில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும் பரிதாபம்!!

11 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கண்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்ததால் ப யந்து போன அவரது தாய் அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தார்.

தினமும் 2 அல்லது 3 முறை கண்களில் இருந்து இரத்தம் வழிவதாகவும் அப்படி வரும் போது இரண்டு நிமிடங்கள் வரை ரத்தம் கசிந்து வரும் எனவும் அவரது தாய் தெரிவித்தார். அந்த சமயத்தில் அந்த சிறுமி வ லி எதுவும் உணராதது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் குழு சிறுமியை க ண்காணித்தது. இதன் காரணம் என்ன என்பதை அறிய பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பார்வை 20-க்கு 20 சரியாக இருந்தது. சி.டி ஸ்கேன்களிலும் எதுவும் தெரியவில்லை. கண்களில் இருந்து வரும் கண்ணீரின் செல்களை பரிசோதித்தபோது எல்லாம் இயல்பாக இருந்துள்ளது.

இதனால் மருத்துவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது சிறுமிக்கு ஹீமோலாக்ரியா (Haemolacria ) என்ற அரிதான நோய் என்று இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஹீமோலாக்ரியா பாக்டீரியாவின் வெண்படலம் மற்றும் ஹார்மோன்களுடன் தொடர்புடையது எனவும் இது ஒரு கட்டியின் அடையாளமாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் சிறுமிக்கு ஆபத்து ஏதும் இருப்பதாக மருத்துவர்கள் கூறவில்லை.

Share via
Copy link
Powered by Social Snap