உயிரை பறிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மாதுளை! அலட்சியம் வேண்டாம்… மரணம் கூட நிகழலாம்!

உலகில் அதிகளவு மக்களால் சாப்பிடப்படும் முக்கியமான பழங்களில் ஒன்று மாதுளையாகும். இதன் சுவை மட்டுமின்றி இதன் மருத்துவ குணங்களுக்குகாக இதனை சாப்பிடுபவர்கள் ஏராளம்.
இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அளப்பறியா நன்மைகளை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாதுளையால் சில ஆபத்துக்களும் ஏற்படும்.

இதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான்.
மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

மாதுளை அலர்ஜிகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.
மாதுளையால் அலர்ஜிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல், வயிற்று வலி மற்றும் படை நோய் ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும்.
சில சந்தர்ப்பங்களில், ஒருவர் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம், தொண்டை மற்றும் நாக்கின் வீக்கம் மற்றும் அனாபிலாக்டிக் பிரச்சினையைக் கூட அனுபவிக்கலாம்.

சில ஆய்வுகளில் காதுகளில் கூட வீக்கம் ஏற்படலாம், மாதுளை சாப்பிட்ட10 நிமிடத்தில் அரிப்பு தொடங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது.

மாதுளை சில மருந்துகளுடன் குறுக்கீடு செய்து சில விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அமிட்ரிப்டைலைன் (எலவில்), டெசிபிரமைன் (நோர்பிராமின்), ஃப்ளூக்ஸெடின் (புரோசாக்), ஒன்டான்செட்ரான் (ஜோஃப்ரான்), டிராமடோல் (அல்ட்ராம்), ரோசுவாஸ்டாடின் (க்ரெஸ்டர்) போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது மாதுளை சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், ஏ.சி.இ இன்ஹிபிட்டர்கள் (கபோடென், வாசோடெக், பிரின்வில், அல்டேஸ், ஜெஸ்ட்ரில், முதலியன) மற்றும் ஆண்டிஹைபர்டென்சிவ் மருந்துகள் (தியோவன், கோசார், கார்டிஸெம், லேசிக்ஸ்) போன்றவற்றுடனும் மாதுளை குறுக்கீடு செய்யும்.

உயர் இரத்த அழுத்த மருந்துகள் சாப்பிடுபவர்கள் மாதுளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் முதலில் தேடுவது மாதுளையைதான். ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

மாதுளை சாறு கர்ப்ப காலத்தில் அவசியமான ஒன்றாக இருந்தாலும் அதனை மற்ற வழிகளில் எடுத்துக்கொள்வது சற்று ஆபத்தானதுதான்.

அலர்ஜிகள் இருந்தால் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, குறிப்பாக இதன் விதைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மாதுளம் பழம் சாப்பிடுவது சர்க்கரை நோய் வராமல் தடுக்க சிறந்த வழி மாதுளை சாப்பிடுவதுதான், ஆனால் நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இதனை சாப்பிடுவதை நிறுத்துவதுதான் நல்லது.

ஏனெனில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு சர்க்கரை உள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap