ஆன்லைன் வகுப்புகள் ரத்து… கொண்டாட்டத்தில் மாணவர்கள்.. நெட்டிசன்கள் வெளியிட்ட வைரல் ட்ரோல் வீடியோ!

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவ, மாணவியர் முயலும்போது ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைகிறது.

அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (ஜூன் 25) விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுத் தரப்பிலும் ஒரு வார காலம் அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜுலை 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த செய்தியை கொண்டாடும் விதமாக நெட்டிசன்கள் காணொளியை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap