காதலன் மீதான ஆசை!… பெற்ற மகளையே கொன்று வீட்டுக்குள் புதைத்த தாய்!

தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த தாயின் செயல் ஆறு வருடத்திற்கு பின்னர் அம்பலமாகியுள்ளது.

திருப்பூரின் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் பேபி, இவர் கடந்த 2014ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 4 குழந்தைகளோடு வேலன் நகரில் உள்ள தாய் சகாயராணி வீட்டுக்கு சென்றுள்ளார்.

சகாயராணியோ, பாக்கியராஜ் என்பவருடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார், இந்நிலையில் ஒருநாள் எஸ்தர் பேபி மாயமானதாக பொலிசிடம் புகார் அளித்துள்ளார் சகாயராணி.

கடந்த 6 ஆண்டுகளாக எஸ்தர்பேபியை பொலிசார் தேடி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
அதாவது, கடந்த மார்ச் மாதம் சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு ஒன்றில் சேவியர் அருண் என்பவர் கைதானார்.

இவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக எஸ்தர் பேபியின் தந்தை புகாரளிக்க, சேவியர் அருணிடம் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது.

6 வருடத்திற்கு முன்பு கணவனை பிரிந்து குழந்தைகளோடு வீட்டிற்கு வந்த மகள் எஸ்தர் பேபியை, தனது குடும்பத்தை கவனித்துவந்த பாக்கியராஜின் ஆசைக்கு இணங்குமாறு தாய் சகாயராணி வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு உடன்பட மறுத்து எஸ்தர்பேபி சண்டையிட்டு வந்ததால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி தன்னைப்பற்றி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் எஸ்தர் பேபி கூறியதால் மகள் என்றும் பாராமல் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் சகாய ராணி.

அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி வீட்டிற்கு வந்த சேவியர் அருண் மற்றும் பாக்கியராஜ் ஆகியோருடன் சேர்ந்து எஸ்தர் பேபியை கத்தியால் குத்திக் கொலை செய்ததுடன் வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டார்.

யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, தன் மகளை காணவில்லை என பொலிசிலும் புகார் கொடுத்து நாடகமாடியுள்ளார்.
இதையடுத்து எஸ்தர் பேபி கொலை வழக்கு தொடர்பாக சேவியர் அருண், சகாயராணி, பாக்கியராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து எஸ்தர் பேபியின் சடலத்தை தோண்டி எடுத்த பொலிசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Share via
Copy link
Powered by Social Snap