விரதம் இருப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?.. ஆரோக்கிய தகவல்..!

விரதம் இருப்பது என்பது ஒரு நாள் முழுவதும் செரிக்கக் கூடிய உணவுகளை அருந்தாமல் வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்ற முறையை தான் நாம் விரதம் என கூறுகிறோம்.
ஆனால், காலம் காலமாக நாம் கடைபிடித்து வருவதால் விரதம் அனைவருக்குமே பழக்கப்பட்ட ஒரு விஷயம். இந்தியாவில் விரதம் பொதுவாக மத ரீதியாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

அது அடிப்படையில் உடல் ஆரோக்கியத்திற்காகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு விஷயம் என்பது தான் உண்மை.
அதை உணர்ந்த பலரும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் விரதம் இருக்கின்றனர். விரதம் இருப்பதால் அப்படி என்ன நன்மை நமக்கு கிடைக்கிறது என்று கேட்கிறீர்களா?…

உண்மையில் விரதம் இருப்பது உடலின் உள்ள நச்சு மற்றும் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்ய பின்பற்றப்படுகிறது.

அதாவது வாரம் முழுவதும் இயங்கும் உடலுக்கு ஒருநாள் மட்டும் விடுப்பு அளித்து தன்னைத் தானே பழுது நீக்க வேலைகளில் ஈடுபட வைப்பதாகும். இதனால் உடலில் தேவையற்றக் கொழுப்புகள் இருந்தாலும் கரைந்துவிடும்.

அதுமட்டுமின்றி இவ்வாறு செய்வதால் குடல் கிருமிகளுக்கு நல்லது என அறிவியல் ரீதியாகவும் நிரூபித்துள்ளனர். அதாவது குடலில் இருக்கும் நுண்ணுயிர்களை பாதுகாக்க இந்த விரதம் முறை உதவுகிறது.

இந்த நுண்ணுயிர்கள் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை அளித்தல், வளர்ச்சிதை மாற்றத்தை உண்டாக்குதல் என உடலில் முக்கிய அம்சங்களுக்கு உதவக்கூடிய பில்லியன் கணக்கான பாக்டீரியாக்களைக் கொண்டது.

எனவே, நோய் அறிகுறிகள் விரைவில் தாக்ககூடிய எந்த செயல்களையும் விரதம் மூலம் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் உடல்நலக் குறைபாடுகள் இருக்காது. அதேபோல், விரதம் முறையில் கொழுப்புகளும் கரைவதால் உடல் எடைக் குறைக்கவும் உதவுகிறது.

Share via
Copy link
Powered by Social Snap