வவுனியாவில் 3 இஞ்ச் நீள ஊசியை விழுங்கிய சிறுவன் : போராடி மீட்ட வைத்தியர்கள்!!

வவுனியாவிலுள்ள பிரபலமான பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் 8 வயது சிறுவன் ஒருவனினால் தவறுதலாக வாய் வழியாக விழுங்கப்பட்ட 3 இஞ்ச் நீளமான ஊசி வாய் களச்சுவரிலிருந்து இதயம் நுரையீரல் போன்ற பகுதிகளை துளைக்க தயாரான நிலையை அறிந்துகொண்ட வைத்தியர்கள்,

உடனடியாக மேற்கொண்ட 25 நிமிட சிகிச்சையின் பின்னர் ஊசி வெற்றிகரமாக வெளியே அகற்றப்பட்ட சம்பவம் அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சனிக்கிழமை மாலை வவுனியாவில் தனது வீட்டில் சிறுவன் ஒருவன் 3 இஞ்ச் நீளமான ஊசி ஒன்றினை தனது வாயில் வைத்து விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாய் வழியே அவ் ஊசி சென்றுவிட்டது.

இதையடுத்து குறித்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு கதிரியக்கபடம் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாலை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டது.

அனுராதபுரம் வைத்தியர்களின் விரைந்து செயலாற்றி 25 நிமிட சிகிச்சையின் பின்னர் வாய் வழியே சென்ற ஊசி வெளியேற்றப்பட்டுள்ளது. இவ் வெற்றிகரமான நடவடிக்கையினால் குறித்த சிறுவனின் ஆபத்து நிலை தற்போது கடந்துவிட்டது.

குறித்த ஊசி வாய்ப்பகுதி களச்சுவரில் குற்றிச் சென்று இதயம் நுரையீரல் துளைக்க நேரிடும் என்ற அறிகுறிகள் கதிரியக்க படத்தில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அனுராதபுரம் வைத்தியர்களின் செயற்பாடு காரணமாக சிறுவனினால் விழுங்கப்பட்ட நீளமான ஊசி வெளியே எடுக்கப்பட்டு மனதை நெகிழச் செய்யும் சம்பவம் வைத்தியசாலையிலுள்ள பலரையும் வியக்க வைத்துள்ளதுடன் அனுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap