3 கோடி சொகுசு காரில் டெலிவிரி செய்யும் நபர்… ஆச்சர்யத்துடன் வாயடைத்துபோன மக்கள்..!

உலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் காரில் போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். வசதி படைத்தவர்கள் காரிலேயே செல்வதும் உண்டு. பணக்கார்களின் ஆசையோ ஃபேராரி, லம்போர்கினி, போர்ச்சே, பென்ஸ்,பிஎம்.டபள்யூ போன்ற கார்களை வாங்க ஆசைப்படுவர்.

அதுவும் லாம்போர்கினி கார் என்பது பலரின் கனவாக உள்ளது. இந்த நிலையில், துபாயில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் யாராவது ஆர்டர் செய்தால் அவர்கள் வீட்டிற்கு லாம்போர்கினி காரில் கொண்டு வந்து டெலிவர் செய்யும் வசதியை செய்து வந்துள்ளார்.

இதைப் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும், இந்த சூப்பர் மார்கெட்டின் மேனேஜர் முகமது ஜெகன்சேப் மாம்பழம் பழங்களின் அரசன் அதை அதற்குரிய மரியாதையுடன் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்து மேலும் ஆச்சர்யமூட்டுகிறார்.

Share via
Copy link
Powered by Social Snap