இன்றைய ராசிபலன் – 29.06.2020

மேஷராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

ரிஷபராசி அன்பர்களே!

தந்தைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். முருகப் பெருமானை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

மிதுனராசி அன்பர்களே!

உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

கடகராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். விநாயகர் வழிபாடு காரியங்களில் வெற்றி தரும்.

சிம்மராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். நண்பர்களோடு பேசுவது மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

கன்னிராசி அன்பர்களே!

எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அம்பிகை வழிபாடு அல்லல்களைப் போக்கி மன நிம்மதி தரும்.

துலாராசி அன்பர்களே!

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளில் பங்கெடுத்துக் கொள்வது ஆறுதலாக இருக்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

விருச்சிகராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்கள் பண உதவி கேட்டு வருவார்கள். ஆறுமுகப் பெருமானை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம்.

தனுசுராசி அன்பர்களே!

சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்குமேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மகரராசி அன்பர்களே!

அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும். செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் விருப்பம் நிறைவேறும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. கால பைரவரை வழிபடுவதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.

மீனராசி அன்பர்களே!

வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்குப் பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். விநாயகரை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

Share via
Copy link
Powered by Social Snap