
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் அடுத்தடுத்து இறந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பலரும் கொதித்தெழுந்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது சிகிச்சை அளித்த கோவில்பட்டி அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது;
தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துவரும்போதே மோசமான நிலையில் இருந்தனர். அவர்கள் சுயநினைவுடன் தான் இருந்தார்கள். அவர்களின் உடல்களில் காயங்கள் இருந்தன.
மூச்சுத்திணறலுடன் வந்ததால் அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உடலில் ரத்தம் கசிந்த நிலையில் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின் ரத்தக்கசிவு நின்று விட்டது. இருவரும் கடைசி நிமிடத்தில்தான் என்னிடம் அழைத்து வரப்பட்டனர் என கூறியுள்ளார்.