வயிற்றுவலியால் துடிதுடித்த பெண்னை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி! சிகிச்சையில் ஆணாக மாறிய அதிசயம்!

மேற்குவங்கத்தில் திருமணமான பெண் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவர் மரபணு ரீதியாக ஆண் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் பிர்பும் பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் ஒரு ஆண் என்பது கண்டறியப்பட்டது.

உடலமைப்பில் அவர் பெண் போன்று இருந்தாலும் மரபணு ரீதியாக அவர் ஆணாக பிறந்துள்ளார்.

பெண்களை போன்றே குரல், மார்பகங்கள் மற்றும் வெளிப்புற தோற்றம் இருந்தாலும் அவருடைய மரபணு ஆண் என்பதை தான் குறிக்கிறது. இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமும் நடைபெற்றுள்ளது. பிறந்ததிலிருந்து இதுவரை அவருக்கு மாதவிடாய் வந்ததில்லை. அவரது உடலுக்குள் விந்தணுக்கள் காணப்படுகிறது.

இதுபோன்று பிரச்சனை ஏற்படுவது மிகவும் அரிதான ஒன்று. இவரது சகோதரிக்கும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கும் இந்த பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. தற்போது அவருக்கு கீமோதெரபி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவருக்கும், அவரது கணவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே உள்ளபடி அவர்கள் வாழ்க்கையை தொடருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap