வளர்ந்த தாடியுடன் கிரிக்கெட் வீரர் டோனி.. இணையத்தில் கசிந்த வைரல் புகைப்படம்..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி புதிய தோற்றத்துடன் காட்சியளிப்பது வழக்கம். ஐபிஎல் தொடரின்போது தலையில் முடியை குறைத்துக் கொண்டு தாடியுள்ளாமல் இளம் வீரர் போன்று காட்சியளிப்பார்.

ஆனால், தற்போது ஊரடங்கு முடக்கத்தால் டோனி பண்ணை வீட்டில் மனைவி, மகளுடன் நேரத்தை செலவழித்து வந்தார். மகளுடன் பைக் ரேஸ், செல்ல நாய்களுடன் விளையாடுவது போன்ற படங்களை வெளியிட்டு வந்தார்.

அதன் பின் வெள்ளை நிற தாடியுடன் வயதான தோற்றத்தில் அவரின் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்தது.

இந்த நிலையில், தற்போது வளர்ந்த தாடியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தை டோனியை வழக்கமான வயதை விட மிகவும் வயதானவராக காட்டுவதாக ரசிகர்கள் ஆச்சர்யமாக கூறி வருகிறார்கள்.

இதனால், சில ரசிகர்கள் எம்எஸ் டோனி மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும் மனநிலையில் தல டோனி இல்லை. வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap