மகளின் திருமணத்தை 50 மில்லியன் பவுண்ட் செலவில் நடத்திய பிரபல கோடீஸ்வரருக்கு நேர்ந்த சோகம்!!

தனது மகள் திருமணத்தை 50 மில்லியன் பவுண்டுகள் செலவில் நடத்திய பிரபல பிரித்தானிய கோடீஸ்வரரான பிரமோத் மிட்டல் (64) திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்லதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரமோத் மிட்டல் பிரபல தொழிலதிபர் லக்‌ஷ்மி மிட்டலின் (70) சகோதரராவார். 130 மில்லியன் பவுண்டுகள் கடன் ஏற்பட்டதால் பிரமோத் மிட்டல் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்னியா நாட்டில் பெரும் கு ற்றம் தொடர்பான வழக்கு ஒன்றில் சிக்கியதையடுத்து அவர் பணத்தை இழந்ததாக நம்பப்படுகிறது. பிரமோத் மிட்டலின் சகோதரரான லக்‌ஷ்மி மிட்டல், பிரித்தானியாவின் 19ஆவது செல்வந்தராவார்.

ஆனால், 6.78 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரராகிய லக்‌ஷ்மி மிட்டல், தனது சகோதாரர் பிரமோத் மிட்டலை அவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கலிலிருந்து மீட்க முன்வரவில்லை.

தந்தையின் ஸ்டீல் சாம்ராஜ்யம் தொடர்பான பிரச்சினை காரணமாக இருவருக்கும் பிரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். தனது சகோதரரின் கடன் பிரச்சினைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று லக்‌ஷ்மி மிட்டல் கருதுவதாக கூறப்படுகிறது.

2013ஆம் ஆண்டு, தனது மகள் திருமணத்தை பார்சிலோனாவில் 50 மில்லியன் பவுண்டுகள் செலவில் ஆடம்பரமாக நடத்தியதால் கவனம் ஈர்த்தார் பிரமோத் மிட்டல். 500 விருந்தினர்கள் கலந்துகொண்ட அந்த திருமணத்தில் 132 பவுண்டு எடையுள்ள திருமண கேக் ஒன்று பரிமாறப்பட்டது பெரிதாக பேசப்பட்டது.

பிரமோத் மிட்டல் போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றில், கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து பங்குதாரராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மோ சடி நடந்துள்ளது என்ற சந்தேகம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பொருளாதார கு ற்றம் போன்ற கு ற்றச்சாட்டுகளின் கீழ் பிரமோத் மிட்டல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap