சாத்தான்குளம் வியாபாரிகள் மரண விவகாரம்:தொலைபேசி மூலம் குடும்பத்திரனருக்கு ஆறுதல் சொன்ன ரஜினி..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்ற காவலில் உயிரிழந்த சாத்தான்குளம் திரு. ஜெயராஜ் மற்றும் திரு. பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மேலும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்வு தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த கொரோனா காலத்தில் பல போலீசார் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக போராடி வரும் நிலையில் இது போன்ற நிகழ்வுகள் மக்களை கொதிப்படைய செய்கிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பல முக்கிய பிரபலங்கள் பலரும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களுடைய அருள்தாள்களையும். இந்த மனிதநேயமற்ற செயலுக்கு தங்களது கண்டனத்தையும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு தனது வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap