பெற்றோர் செய்த காரியம்… ஜீரணிக்க முடியாத மகன் ஏக்கத்தில் எடுத்த விபரீத முடிவு! கதறி துடித்த பெற்றோர்

பெற்றோர் பராமரிக்காத ஏக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி கே.ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் லட்சுமணபெருமாள். இவர், அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர், மதுரை மேலூரில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர்களுடைய மகன் நித்திஷ்ராம் (21).

இவர், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கல்லூரி விடுமுறை என்பதால் ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் அவருடைய தந்தை நடைபயிற்சி சென்று விட்டு வீட்டுக்கு வந்து மகனை பார்த்தபோது, தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்றதுடன், சடலத்தை பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நித்திஷ்ராம் தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து ஒரு கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர். அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே மகன் என்ற போதிலும் பெற்றோர் தன்னை சரியாக பராமரிக்கவில்லை என்ற ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap