
கொரோனா வைரஸ் தொற்று பெரும் பிரச்சினையாக உள்ளது. வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவுவதை எதிர்த்து அரசு தொடர்ந்து போராடி வருவதால், தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் முதல் ட்ரோன் தொழில்நுட்பத்தைக் கொண்டு, பல இடங்களில் கிருமி நீக்கம் செய்யும் பணியைத் தொடங்கியது.
இதில் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் நடிகர் அஜித்தின் வழிகாட்டுதலின் படி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்டது என்பதால், ‘தல’ அஜித் மற்றும் அவரது குழுவுக்கும் அனைவரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
இப்போது, அந்த அணியைப் பற்றிய சமீபத்திய அறிக்கை என்னவென்றால், அவர்களின் தொழில்நுட்பத்தை அண்டை மாநிலமான கர்நாடகாவும் பின்பற்றிவருகிறது. தொற்றுநோயை எதிர்த்துப் போராட தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக கர்நாடக மாநில துணை முதல்வர் டாக்டர் அஷ்வத் நாராயணன் நடிகர் அஜித் மற்றும் அவரது அணி ‘தக்ஷா’வைப் பாராட்டியுள்ளார்.A